Friday 14 September 2018

திராவிட இயக்கத்தின் மூலவர் அயோத்திதாசர்!
ஈ.வெ.ராமசாமி, சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி உள்ளிட்டட அரசியல் சந்தர்ப்பவாதிகள் திராவிட இயக்கத்தை நமத்துப்போகச் செய்தவர்கள்!
**************************************************************************
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலாக நடைபெற்ற ஓரியண்டலிச ஆய்வுகளின் ஒரு பகுதியாக தமிழ்ச் சூழலில் திராவிடம் எனும் கருத்தியல் கவனம்பெறத் தொடங்கியது. எலீசு, கால்டுவல் உள்ளிட்ட ஒரிண்டலிச ஆய்வாளர்கள் திராவிடம் எனும் கருத்தியலுக்கான மொழியியல் அடிப்படைகளை வழங்கினர். இச்சூழலில் சமூக விடுதலைக்கான அரசியல் சொல்ல்லாடளாக திராவிடத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் அயோத்திதாசர். அவரது எழுத்துக்களில் பரிட்சயம் கொண்டோருக்கு இவ்வுண்மை தெற்றனத் துலங்கும். அயோத்திதாசரைப் பின்பற்றியே பகுத்தறிவு மற்றும் திராவிடப் பதாகைக்குள் ஈ.வெ.ரா. வந்து சேர்ந்தார் என்பது காலவோட்டத்தில் மறைக்கப்பட்ட சரித்திரம். சமகாலத்தில் இடைசாதிகளின் (அப்பட்டமாகச் சொல்வாதானால் சூத்திரர்களின்) புரட்சிகரப் புகலிடமாக திராவிடம் சுருங்கிப் போவதற்கான வினைப்பாடுகளில் மேற்சொன்ன் மூவருக்கும் பெரிய அளவில் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. அயோத்திதாசர் முன்வைத்த திராவிடமும் தமிழ் பௌத்தமும் சமூக சமத்துவத்தை இலக்காகக் கொண்டு பயணிப்பதற்கான அரசியலை மையப்படுத்துகிறது. இவர்களது திராவிடம் இனவாதத்திற்கும், மொழி அடிப்படை வாதத்திற்கும், இடைச்சாதி மேலாண்மைக்கும் வழிகோலியது. சமாகலத்தில் அங்கீகரிக்கப்பட்ட திராவிட அறிவுஜீவிகளால் அயோத்திதாசர் கவனமாக மறக்கப்படுகிறார். அயோத்திதாசரைப் பயின்று விவாதிப்பதன் ஊடாக சோபை இழந்து கிடக்கும் "திராவிடத்தை" அதற்கே உரித்தனா அழுத்தமான பொருண்மைகலுடன் புணரமைக்க இயலும். இது, தங்களைத் திராவிடச் சான்றோர்களாகக் கருதிக்கொள்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய காலத்தின் கடமையாகவும் இருக்கிறது.
எதைச்சையாக அயோத்திதாசரின் எழுத்துக்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது "இராஜாம்பாள் ஓர் இனிய தமிழ் நாவல்" எனும் பத்தியை வாசிக்க நேரிட்டது. அப்பத்தி "ஒரு பாணைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதற்கிணங்க அக்மார்க் திராவிடர்கள் முன்வைக்கும் திராவிடத்திற்கும், அயோத்திதாசர் முன்வைக்கும் திராவிடத்திற்கும் இடையிலான பாராதூர இடைவெளிகள் புலப்பதுத்தியது.
அப்பத்தி இதோ,
இராஜாம்பாள் ஓர் இனிய தமிழ் நாவல்
**************************************************************************
மேற்கூறிய பெயர்வாய்ந்த ஓர் புத்தகத்தைக் கண்ணுற்றோம்.அதன் 34வது பக்கம் 21வது வரியில் ஓர் பண்ணைக்காரப் பறையன் முநிசாமிஎன்போன் சாஸ்திரியார் வீட்டில் வந்துள்ள பாம்பை அடிக்க உட்செல்லுங் கால் நடுங்கிக்கொண்டே சென்றானாம். அவன் நடுங்கிக்கொண்டே சென்ற காரணம் யாதென்றாலோ அவன் பாம்புக்கு பயப்படவில்லை, சாஸ்திரியார் வீட்டிலுள்ள இலட்சுமி நீங்கிவிடுவாளென்று நடுங்கி உள்ளுக்குச் சென்றானாம். அந்தோ! பறையரென்றழைக்கப்படுவோர் பொய்மூட்டை களைக் கட்டவாய்யினும் பொய்மூட்டைகளை அவிழ்க்கவாயினு மறியார்கள்.
அடா யாருமற்ற வீட்டில் இலட்சுமி இருக்கிராளென்றால் அவளுக்குக் கண்ணும் மூக்கும் இருக்கிறதாவென்பான். அக்கால் சாஸ்திரியாரும் சாஸ்திரியார் சரிதத்தை எழுதியவரும் தங்கள் பொய் மூட்டைகளைப் புரட்டி புரட்டிப் பார்க்க நேரிடும். அத்தகையப் போயமூட்டைகளைப் புரட்டுவதினும் பண்ணைப்பறையன் காலினால் மிதித்துத் துவைத்த அரிசிமூட்டை லட்சுமி சாஸ்திரியார் வீட்டிலிருக்கின்றாளா இல்லையா என்றும், பண்ணைப்பறையன் காலினால் மிதித்துத் துவைத்தப் புளிமூட்டை லட்சுமி சாஸ்திரியார் வீட்டிலிருக்ருக்கின்றாளா இல்லையா என்றும், பண்ணைப்பறையன் காலினால் மிதித்துத் துவைத்த வெல்ல மூட்டை லட்சுமி சாஸ்திரியார் வீட்டிலிருக்ருக்கின்றாளா இல்லையாவேன் றாராய்வரேல்இலட்சுமி சம்பத்து விளங்கும்.
சில விளங்காமைக்குக் காரணம் சாதிபோர்வைகொண்ட மூதேவிகளாகுஞ் சோம்பேரிகளைக் கண்டவுடன் விலகினும் விலகுவள். பண்ணைப்பறையநென்போனை அவ்விலட்சுமி கண்டாலோ அப்பா மகனே என்றணைத்து உன் முயற்சியாம் உதையினாலும் மிதியினாலும் அரிசி உருக்கொண்டு எல்லோருக்கும் ஆகாரமாயினோம். உன் முயற்சியாம் உதையினாலும் மிதியினாலும் புளிவுருதிறண்டு அருசுவையிலொன் றாயினோம். உன் முயற்சியாம் உதையினாலும் மிதியினாலும் வெல்ல வுருதி றண்டு இன்னமுதாகி தேவர்களுக்கும் மக்களுக்கு மினிய பாகியினோ மென் றகங்குளிர்ந்து முகமலர்ந்திருப்பள்.
இவ்வகை யிந்துதேச முதுவெலும்பாக விளங்கும் பறைனென்போனைப் பழிகூரிய பாவ லாரையொத்த நாவலர்கள் இன்னும் பத்து பனிரண்டு பெயர் தோன்றுவார்கலாயின் சுதேசீயமும் சீர்கெட்டு சுயராட்சியமும் பேர்கேட்டு அழியவேண்டியதேயாம்.
************************************************************************
மனிதகுல விடுதலைக்கான கருவி மார்க்சியம் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்தும் இல்லையென்றாலும் இந்திய, தமிழ்ச் சூழைப் பொருத்தமட்டில் மார்க்ஸ் காட்டிய திசையில் பயணிப்பதற்கு அயோத்திதாசர், அம்பேத்கர் எனும் இரண்டு அகல் விளக்குகளும் அத்தியாவசியம் ஆகும்.